லோகோ பைலட்கள் ரத்ததானம்
மதுரை, நவ. 5: மதுரை கோட்ட எஸ்ஆர்எம்யூ லோகோ பைலட் தொழிலாளர்கள் பிரிவு சார்பில், 1968ல் போராடிய தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ரத்த தான முகாம் நடந்தது. மதுரை ரயில் நிலைய கோட்ட மேலாளர் அலுவலகம் எதிரே உள்ள மருத்துவமனை வளாக கூட்டரங்கில் நடைபெற்ற முகாமில் மதுரை கோட்ட மேலாளர் ஓம்பிரகாஷ் மீனா, உதவி மேலாளர் ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மதுரை கோட்ட எஸ்ஆர்எம்யூ செயலாளர் ரபீக் தலைமை வகித்தார். உதவி செயலாளர் ராம்குமார், லோகோ பைலெட் பிரிவு செயலாளர் அழகுராஜா, தலைவர் ரவிசங்கர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.
Advertisement
Advertisement