மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
மதுரை, டிச. 4: மதுரையில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாற்றுத் திறனாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 24 ஐ உடனடியாக ரத்து செய்து, அரசாணை எண் 20ல் குறிப்பிட்டுள்ளபடி சிறப்பு ஆட்சேர்ப்பு நடத்தக் கோரி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம், தமிழ்நாடு பார்வையற்றோர் கைப்பந்து சங்கம், பார்வையற்றோர் ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கம் ஆகியவற்றின் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க நிர்வாகி சரவணகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement