எலெக்ட்ரீசியன் தற்கொலை
அலங்காநல்லூர், டிச. 4: அலங்காநல்லூர்அருகே உள்ள வலசை கிராமத்தை சேர்ந்தவர் விஜய் பிரபாகரன் (26). எலெக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி வினோதா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக மன வேதனை அடைந்த அவர், நேற்று மாலை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement