கள்ளிக்குடி அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு சாவு
திருமங்கலம், நவ. 1:கள்ளிக்குடி அருகேயுள்ள தூம்பகுளத்தை சேர்ந்தவர் ராமர். இவரது மகன் பாண்டீஸ்வரன் (37). இவருக்கு திருமணமாகி மீனாட்சி என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனனர். பாண்டீஸ்வரன் பிளம்பராக பணி புரிந்து வந்துள்ளார். இதற்கிடையே அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்பத்தின் வரவு செலவு தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது.
Advertisement
இதனால் கடந்த சில தினங்களாக பாண்டீஸ்வரன் மன விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் தூம்பகுளம் கிராமத்தில் உள்ள கோயில் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கூடக்கோவில் போலீசார், அவரது உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement