காந்திமியூசியத்தில் சுய வேலைவாய்ப்பு பயிற்சி
Advertisement
மதுரை, அக். 29: மதுரை காந்தி மியூசியம் சார்பில் அக்.31 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நடத்தப்படுகிறது. இப்பயிற்சியில் குறுந்தானிய உணவுகள், குறுந்தானியங்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. பயிற்சி நிறைவில் சர்வ சமய வழிபாட்டில் சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் காந்தி மியூசிய கல்வி அலுவலர் ஆர்.நடராஜனை, ‘86100 94881’ எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என காந்திமியூசிய செயலாளர் கேஆர் நந்தாராவ் தெரிவித்துள்ளார்.
Advertisement