தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2ம் நாளாக நீடித்த வருவாய் துறையினரின் காத்திருப்பு போராட்டம்

மதுரை, நவ. 28: கருணை பணி நியமன உச்சவரம்பை 5 சதவீதமாக குறைத்ததை ரத்து செய்து, 25 சதவீதமாக்க வேண்டும். அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். துணை ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பட்டியலை வெளியிட வேண்டும். பட்டா மாறுதலுக்கான அதிகாரம் பழைய நிலையிலேயே தொடர ேவண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில், இரண்டாம் நாளாக நேற்றும் பணி பணிபுறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

Advertisement

மதுரை மாவட்டத்திலுள்ள வருவாய் துறை சார்ந்த அலுவலகங்கள் மற்றும் விராட்டிபத்துவில் உள்ள மேற்கு தாலுகா, திருநகரில் உள்ள திருப்பரங்குன்றம் தாலுகா, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு தாலுகா, ஒத்தக்கடை நரசிங்கத்தில் உள்ள கிழக்கு தாலுகா அலுவலகங்களில் பணியாற்றும் சுமார் 600க்கும் மேற்பட்டோர் நேற்று பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநிலத் தலைவர் முருகையன், மாவட்டத் தலைவர் கோபி, செயலாளர் முகைதீன் அப்துல்காதர், பொருளாளர் முத்துப்பாண்டி மற்றும் கிழக்கு தாலுகாவில் தாசில்தார் கிளமெண்ட் சுரேஷ் தலைமையில் ஏராளமானோர் இந்த காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த போராட்டத்தால், வருவாய்த்துறை அலுவலகங்களில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.

Advertisement