5 வயது வரையிலான குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவமாக வழங்கப்படுகிறது
மதுரை, அக். 28: மதுரை மாநகராட்சி அறிக்கையில் கூறி இருப்பதாவது: வைட்டமின் ஏ திரவம் வழங்கும் திட்டத்தின்படி, மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற நலவாழ்வு மையம் மற்றும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று துவங்கிய இத்திட்டம் அக்.31 வரை 4 நாட்களுக்கு (புதன்கிழமை தவிர்த்து) நடக்கிறது.
இம்முகாமில் 6 மாதம் முதல் 12 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மில்லி வைட்டமின் ஏ திரவம், 1 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 2 மில்லி திரவம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஐந்து வயதுக்கு உட்பட்ட சுமார் 1,19,447 குழந்தைகள் பயனடைவர். எனவே பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி வைட்டமின் ஏ திரவம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.