துணை முதல்வர் பிறந்தநாள் விழா பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
மதுரை, நவ. 27: தமிழ்நாடு துணை முதல்வர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. ஆலோசனையின் படி பழங்காநத்தம் பகுதி, 67வது வட்ட திமுக சார்பில் விராட்டிபத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடி முதியோருக்கு அறுசுவை உணவு வழங்கியும், அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு மாநகர் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் துரை கோபால் என்கிற அன்பு தலைமை வகித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 67வது வட்டச் செயலாளர் வி.எஸ்.பாக்கியராஜ் என்ற ராஜேஷ் வரவேற்றார். திமுக மாநில அணி நிர்வாகிகள் சம்மட்டிபுரம் கணேசன், சி.வீரகணேசன், பொதுக்குழு உறுப்பினர் வைகை பரமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் பொறியாளர் அணி சிவா திமுக நிர்வாகிகள் அருண்குமார், மகேஷ், ஆனந்த், நேதாஜி, வேல்முருகன், லோகநாதன், மகளிர் அணி ஈஸ்வரி, ராஜகுமாரி, சோபியா மற்றும் திமுகவினர், பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
இதேபோல் மதுரை தானப்ப முதலியார் தெருவில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சிக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் பி.டி.மணிமாறன், எம்.ஜி. முத்து கணேசன் தலைமை வகித்தனர். வட்டச் செயலாளர் காமராஜ், அணி நிர்வாகிகள் செல்லத்துரை, காமாட்சி முன்னிலை வகித்தனர். மாமன்ற உறுப்பினர் விஜயா குரு வரவேற்றார். இதில் திமுக நிர்வாகிகள் திராவிடமாரி, கிருஷ்ணகுமார், பாலமுருகன், முத்துக்குமரன், குணசேகரன், செல்லத்துரை, கார்த்திக், பேங்க் செந்தில் உள்ளிட்ட திரளான திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.