அக்.27ம் தேதி நடக்கிறது மாநகர் மாவட்ட திமுக சார்பில் மருது சகோதரர்கள் குருபூஜை: கோ.தளபதி எம்எல்ஏ அறிக்கை
மதுரை, அக். 25: மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் மாமன்னர்கள் மருதுபாண்டியர் 224வது குருபூஜை விழாவை முன்னிட்டு, தெப்பக்குளத்தில் உள்ள அன்னாரது திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளதாக மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்குவகித்த மாமன்னர்கள் மருது சகோதரர்களின் 224வது குருபூஜையை முன்னிட்டு, மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் வருகிற அக்.27ம் தேதி காலை 10 மணியளவில் தெப்பக்குளத்தில் அமைந்துள்ள, மாமன்னர்கள் மருது சகோதரர்களின் திருவுருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது
இந்நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி கழக, வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கழக முன்னோடிகள், கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரித்துள்ளார்