அக்.2ல் இறைச்சி விற்பனைக்கு தடை
Advertisement
மதுரை, செப். 24: மதுரை மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து வார்டுப் பகுதிகளில் வரும் அக்.2 வியாழக்கிழமை காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அரசாணைப்படி கால்நடைகளை வதை செய்தல், அனைத்து விதமான இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற உயிரினங்களை வதை செய்யக்கூடாது. இந்த விற்பனை கடைகளையும் திறந்து வைக்க கூடாது. மீறி செயல்படுவர்களின் கடைகளில் உள்ள இறைச்சியை பறிமுதல் செய்வதுடன், பொது சுகாதார சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement