பைக் திருடிய வாலிபர் கைது
Advertisement
மதுரை, செப். 24: ஐராவதநல்லூரை சேர்ந்த துரைப்பாண்டி மகன் நவீன்குமார்(34). வெளியே சென்று விட்டு வீட்டிற்கு செப்.21 அன்று மதியம் வந்தார். வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தி விட்டு, மறுநாள் காலையில் எழுந்து வந்து பார்த்தார். அப்போது, வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த பைக் மாயமானது. இது குறித்து தெப்பக்குளம் போலீசில் நவீன்குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பைக்கை திருடிச்சென்றது அண்ணாநகர் செண்பகத்தோப்பை சேர்ந்த ராஜேஸ்குமார்(22) எனத்தெரிந்தது. இதனையடுத்து ராஜேஸ்குமாரை கைது செய்து, அவரிடமிருந்து பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், பல்வேறு இடங்களில் ராஜேஸ்குமார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement