போலீசிடம் தப்பிய கைதி சிக்கினார்
Advertisement
மதுரை, செப். 22: விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகன் நாகராஜ்(24). இவரை போக்சோ வழக்கில் நேற்று கரிமேடு போலீசார் கைது செய்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்த அவரை ஆட்டோவில் போலீஸார் அழைத்துச் சென்றனர். வழியில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆவணம் ஒன்றை நகல் எடுக்க, ஆட்டோவை நிறுத்தினர். அப்போது, நாகராஜ் திடீரென தப்பியோடினார். இதுகுறித்து பல்வேறு பகுதிகளில் இருந்த போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையின் பலனாக சுமார் 30 நிமிடத்தில் அதே பகுதியில் மறைந்திருந்த நாகராஜ் சிக்கினார். பின்னர் மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நாகராஜ், விசாரணை கைதியாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Advertisement