சோழவந்தான் அருகே குடத்திற்குள் தலை சிக்கி பரிதவித்த நாய் மீட்பு
சோழவந்தான், டிச. 12: சோழவந்தான் அருகே, குடத்திற்குள் தலை சிக்கிக்கொண்டதால் பரிதவித்த நாய், தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டது. சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோகுல். இவரது வளர்ப்பு நாய் நேற்று வீட்டில் இருக்கும் எவர்சில்வர் குடத்திற்குள், எதிர்பாராத வகையில் தலையை கொடுத்துள்ளது. பின்னர், தலையை வெளியே எடுக்க முடியாமல் அலறித் துடித்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கோகுல், சோழவந்தான் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கூறினார்.
Advertisement
இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்புடன் குடத்தை வெட்டி எடுத்து நாயின் தலையை வெளியே எடுத்தனர். பின்னர் அந்த நாய், நன்றியுடன் வாலை ஆட்டியபடி துள்ளிக் குதித்து ஓடியது. வாயில்லா ஜீவனை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களை கோகுல் மற்றும் கிராமத்தினர் பாராட்டினர்.
Advertisement