உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா
மதுரை, டிச. 11: உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, பூக்களை நாடி, புன்னகைத் தேடி என்ற தலைப்பில் மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள கல்லூரி கலையரங்கில் சிறப்புக் குழந்தைகள் அவர்களின் பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் விழா நடைபெற்றது. இதில் 1500க்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகள், அவர்களின் பெற்றோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக ஓய்வு ெபற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகே.என்.பாட்ஷா கலந்து கொண்டார். பாரா ஒலிம்பிக் போட்டியில் உலக அளவில் சாதனை புரிந்த மாற்றுத்திறனாளிகளை கௌரவிப்பது, சிறப்பு குழந்தைகளுக்கான ஸ்பெஷல் ஒலிம்பிக் போட்டியில் சாதனை, மாநில அளவில் சாதனை புரிந்த சிறப்பு குழந்தைகளை கௌரவிப்பது மற்றும் மாற்றுத்திறனாளிகளை கௌரவிப்பது ஆகிய நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து சிறப்பு குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.