மதுரையில் டிச.7ல் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்: அமைச்சர் பி.மூர்த்தி நம்பிக்கை
Advertisement
மதுரை, டிச. 5: மதுரையில் டிச.7ம் தேதி நடைபெற உள்ள மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தமிழ்நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த விழாவாக அமையும் என, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை ஆலாத்தூரில், வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் எம்.ஆர்.எம்.பாலசுப்ரமணியம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்டத் துணைச் செயலாளர் ஆ.வெங்கடேசன் எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கரு தியாகராஜன், தனச்செல்வம், வடிவேல் முருகன், புதூர் சேகர், மாநில அணி நிர்வாகிகள் நேரு பாண்டியன், மதுரை பாலா, ஆர்.கணேசன், தொகுதி பொறுப்பாளர்கள் சுப.த.சம்பத், விஜய கதிரவன், ஆனந்த், மாவட்ட துணைச் செயலாளர் ரோகிணி பொம்மதேவன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
Advertisement