மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று முதல் சிலம்பம் போட்டிகள் நடைபெறும்: அதிகாரிகள் தகவல்
மதுரை, செப். 3: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கான நீச்சல், கபடி, கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், வாலிபால், கால்பந்து ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது. விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல் முதுநிலை மேலாளர், மாவட்ட விளையாட்டு அலுவலர், பயிற்சியாளர்கள் உள்பட் பலரும் பங்கேற்றுள்ளனர். தனிநபர் மற்றும் குழு போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.
பரிசுத்தொகை அவரவர் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மதுரை மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களின் திறமைகளை ெவளிபடுத்தி அசத்தி வருகின்றனர். தொடர்ந்து விளையாட்டு ஆணையம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு விளையாட்டு போட்டிகளில் போட்டியாளர்கள் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் நடைபெறவிருந்த சிலம்பம் போட்டிகள் பல்ேவறு காரணங்களால் ேவறு தேதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சிலம்பம் போட்டிகள் இன்று முதல் தொடர்ந்து நடைபெறும் எனவும், இது குறித்து போட்டியாளர்களுக்கு தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.