சாலை விதிகளை மீறும் ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை
மதுரை, டிச. 2: மாநகர போக்குவரத்து போலீசார் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் வாகன விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன. வாகனங்களை இயக்குவோர், சாலைப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாததால் மட்டுமே விபத்துகள் ஏற்படுகின்றன என்பதை அனைவரும் உணர வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பினை முதன்மைப்படுத்தும் வகையில், சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.அதன்படி, தலைக்கவசம் அணியாமல் டூவீலர் இயக்கும் ஓட்டுநர்களின், ஓட்டுநர் உரிமத்தின் மீது மூன்று மாத தற்காலிக தடையுடன் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். மது குடித்து விட்டு வாகனத்தினை இயக்குதல், சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தினை இயக்குதல், செல்போன் பயன்படுத்தி கொண்டே வாகனத்தினை இயக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர்களின் ஓட்டுநர் உரிமங்களின் மீது தற்காலிக தடை நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அசல் ஓட்டுநர் உரிமமும் பறிமுதல் செய்யப்படும்.