மதுராந்தகம்: விழுப்புரத்தில் இருந்து 3 பெண்கள், 2 ஆண்கள் என 5 பேர் நேற்று காலை சென்னைக்கு காரில் புறப்பட்டனர். அவர்கள், மதுராந்தகம் அருகே சிலாவட்டம் என்ற இடத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்தபோது திடீரென காரின் டயர் வெடித்தது. இதில் தாறுமாறாக ஓடிய கார், சாலை தடுப்பு சுவற்றில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த டிரைவர் உள்ளிட்ட 5 பேரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
======================