சிறுமிக்கு பாலியல் தொல்லை லாரி டிரைவருக்கு 10 ஆண்டு சிறை
கோவை, ஜூலை 1: கோவை சுங்கம் திருச்சி ரோடு காந்தி நகரை சேர்ந்தவர் முருகன் என்கிற முருகேசன் (32). லாரி டிரைவர். இவர், பக்கத்து வீட்டில் உள்ள 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கடந்த 2018ம் ஆண்டு கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீதான வழக்கு விசாரணை கோவை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. சாட்சி விசாரணை, குறுக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் இவ்வழக்கு விசாரணை நேற்று மீண்டும் நடந்தது. அப்போது, முருகேசன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட காரணத்தால், இவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பு கூறினார்.