லாரி டிரைவரிடம் செல்போன் பறிப்பு
தூத்துக்குடி, ஜூன் 11: தூத்துக்குடியில் லாரி டிரைவரை மிரட்டி செல்போன் பறித்துச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லையை சேர்ந்தவர் ராஜேஷ். லாரி டிரைவரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு 3வது மைல் அருகே உள்ள இந்திய உணவுக்கழக கிடங்கு பகுதியில் உள்ள இணைப்புச் சாலையோரத்தில் லாரியை நிறுத்தியிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் மூவர், ராஜேசை மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், மடத்தூர் முருகேசன் நகரைச் சேர்ந்த பாலமுருகன் மகன் மலையரசன்(21), பிராங்க்ளின்(20), திருவிக நகரைச் சோ்ந்த இளஞ்சிறார் ஆகிய 3 பேர் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து செல்போனையும் பறிமுதல் செய்தனர்.