வேதாரண்யத்தில் மகளிர் சுய உதவி குழுவுக்கு கடன் வழங்கும் விழா
வேதாரண்யம், ஜூலை 29: வேதாரண்யத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கூட்டுறவு வங்கி சார்பில் ரூ.3லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் நகர கூட்டுறவு வங்கியின் சார்பில் மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வங்கி செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை தாமிரபரணி மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூபாய் மூன்று லட்சம் குழு கடனை வங்கி செயலாளர் மணிகண்டன் வழங்கினார். நிகழ்ச்சியில் வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement