சாத்தான்குளம் அருகே லோடு ஆட்டோ கண்ணாடி உடைப்பு
சாத்தான்குளம், ஜூலை 9: சாத்தான்குளம் அருகே கீழஅம்பலச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சுடலைமணி மகன் கணேஷ் கண்ணன்(28). இவர், சவுண்ட் சர்வீஸ் தொழில் செய்து வருகிறார். இதற்கான ெபாருட்களை கொண்டு செல்ல லோடு ஆட்டோ வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு லோடு ஆட்டோவை வீட்டுமுன் நிறுத்தியிருந்தார். அப்போது இதே ஊரைச் சேர்ந்த 2 பேர், முன்விரோத்தத்தில் லோடு ஆட்டோ முன்பக்க கண்ணாடியை கல் மற்றும் கம்பால் தாக்கி சேதப்படுத்தினர். சத்தம் கேட்டு அக்கம்,பக்கத்தினர் திரளவே மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து கணேஷ் கண்ணன், சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ நாகராஜன் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகரன் விசாரணை நடத்தி வருகிறார்.
Advertisement
Advertisement