தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கீரை விவசாயத்தில் லாபம் அள்ளலாம் கேவிகே தலைவர் தகவல்

 

Advertisement

காரைக்குடி, மே 20: கீரை விவசாயத்தின் மூலம் மகத்தான மகசூலை அள்ளலாம் என குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்தூர்குமரன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், கீரையில் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் ஏ,கே. சி, ரிபோபிளவின், நியாசின், சோடியம், இரும்புச்சத்து, கால்சியம், மாங்கனீசியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்பட பல்வேறு சத்துக்கள் உள்ளன. தண்டுக் கீரையை பொறுத்தவரை விதைத்த 25 நாட்களில் கிள்ளி எடுக்க வேண்டும்.

பின் 7 நாட்கள் இடைவெளியில் 10 முறை அறுவடை செய்யலாம். எக்டேருக்கு 30 டன் மகசூல் எடுக்கலாம். பசலைக் கீரை நடவு செய் 2 மாதங்களில் அறுவடை செய்யலாம். எக்டேருக்கு 4000 முதல் 6000 கிலோ கிடைக்கும். குழிமுறையில் நடவேண்டும். ஒரு குழிக்கு 10 கிலோ மக்கிய தொழு உரம் இடவேண்டும். பாலக்கீரை விதைத்த ஒரு மாதத்தில் அறுவடை செய்யலாம். இதன் வாழ்நாள் 3 மாதம்.

ஒரு எக்டேருக்கு தொழுஉரம் 25 டன்கள், தழைச்சத்து 60 கிலோ, மணிச்சத்து 60 கிலோ, மணிச்சத்து 60 கிலோ போட வேண்டும். புதினா கீரை நடவு செய்த ஒரு மாதத்திலிருந்து வருடம் முழுவதும் அறுவடை செய்யலாம். ஒரு எக்டேரில் 2000 கிலோ கிடைக்கும். முருங்கைக் கீரை இது மகத்தான பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியது. ரத்த சோகை, வயிற்றுப்புண், கண் நோய், ஆஸ்துமா, மார்பு சளி, சுவாசக் கோளாறுகளுக்கு சிறந்தது. கீரையின் தேவை அதிகரித்து வருவதால் கீரை விவசாயத்தில் ஈடுபடுவதன் மூலம் அதிக மகசூல் அள்ளலாம் என்றார்.

Advertisement