தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 33,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி

நீடாமங்கலம், ஜூலை 23: நீடாமங்கலம் வேளாண் பகுதிகளில் சுமார் 33,000 ஏக்கரில் முன் பட்ட குறுவை சாகுபடியில் விவசாயிகள் நெற்பயிரில் களை எடுக்கும் பணியில் விவசாய பெண் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றர்.

நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதியில் சுமார் 33,000 ஏக்கரில் முன் பட்ட குறுவை சாகுபடியை விவசாயிகள் தொடங்கி செய்து வருகின்றனர். இந்த சாகுபடியில் சிலர் நிலத்தடி நீரில் மின்மோட்டாரை கொண்டு பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு குறுவை சாகுபடியில் சுமார் சுமார் 33,000 ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடியை செய்து முடித்தனர். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் தொடங்கிய மழையால் கர்நாடக அணைகள் நிரம்பி வழிவதால் மேட்டூர் அணை முழு கொள்ளவு எட்டியுள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து பானத்திற்கு நீர் அதிகமாக திறக்கப்பட்டு கடைமடை வரை பாசன நீர் சரியானபடி வந்தடைந்து விவசாயிகள் குறுவைசாகுபடி பணியை மும்முரமாக தொடங்கியுள்ளனர்.

டெல்டா மாவட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதிகளில் நீடாமங்கலத்தில் இருந்து கிழக்குப் பகுதியில் பெரும்பாலானோர் சம்பா சாகுபடியை தொடங்க அதற்கான வயல்களை சுத்தம் செய்யும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

நீடாமங்கலம் பகுதியில் குறுவை சாகுபடி, தாளடி சாகுபடி, சம்பா மற்றும் கோடை சாகுபடி என நிலத்தடி நீரை பயன்படுத்தி சிலர் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் நீடாமங்கலம் வேளாண் கோட்டப்பகுதியில் கோடை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தற்போது இயந்திர அறுவடைபணி முடியும் தருவாயில் உள்ளது. தற்போது முன் பட்ட குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ரிஷியூர், கண்ணம்பாடி, வரதராஜபெருமாள் கட்டளை, கட்டையடி, பெரம்பூர், அனுமந்தபுரம், சித்தமல்லி, ராயபூரம், காளாச்சேரி, மேலபூவனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோடை நடவுக்கு முடிந்து அறுவடை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து விவசாய தொழிலாளர்கள் முன்பட்ட குறுவை நெல்பயிரில் களை எடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். முன் கூட்டியே விவசாயிகள் நடவு செய்த பல இடங்களில் நெல் பயிராகவும், அதற்கான களை எடுப்பு, உரமிடுதல், பூச்சி மருந்து அடிக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Related News