கும்பாபிஷேக விழா
உடுமலை, மார்ச் 14: உடுமலை அருகே சின்னவாளவாடி கிராமத்தில் உள்ள 300 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி மகா கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக, 10ம் தேதி முதல் சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடைபெற்றன. நேற்று முன்தினம் காலை விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அன்னதனாம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
Advertisement
Advertisement