ஆலந்துறை அருகே வீரபத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா
தொண்டாமுத்தூர், ஜூலை 7: கோவை ஆலந்துறை அருகே இருட்டுப்பள்ளம் வீரபத்திர காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா மகா கணபதி வேள்வியுடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து வாஸ்து, கோ பூஜை, இருட்டு பள்ளம் விநாயகர் கோயிலில் இருந்து முளைப்பாரி, தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து, காப்பு கட்டுதல், மகா கணபதி, மகாலட்சுமி பூஜை, மருந்து சான்றிதழ் நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று காலை 6 மணிக்கு மங்கல இசை நிகழ்ச்சி, காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேகம், அம்மன் அபிஷேக அலங்கார பூஜை, அன்னதானம் நடக்கிறது. இதனை முன்னிட்டு வேள்விகளை சோமசுந்தர குருக்கள் குழுவினர் செய்து வருகின்றனர். தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை 24 மனை செட்டியார்கள் (கெனித்தியர்) அறக்கட்டளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
Advertisement
Advertisement