குளித்தலை - மணப்பாறை செல்லும் ரயில்வே கேட் சாலை பள்ளம் சீரமைப்பு
குளித்தலை, ஜூலை 8: கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை மணப்பாறை சாலையில் அமைந்துள்ளது ரயில்வே மேம்பாலம். இந்த ரயில்வே மேம்பாலம் வழியாக சென்னை பெரம்பலூர் துறையூர் முசிறி நாமக்கல் சேலம் மற்றும் கரூர் திருச்சி உள்ளிட்ட மார்க்கத்திலிருந்து திண்டுக்கல் மதுரை பழனி கொடைக்கானல் தேனி கம்பம் போடி செல்ல வேண்டுமென்றால் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். மேலும் சரக்கு வாகனங்களும் இந்த ரயில்வே கேட் வழியாகத்தான் பல்வேறு ஊர்களுக்கு செல்கிறது.
அது மட்டுமல்லாது உள்ளூர் வாகனங்களும் நகர பேருந்துகள் வெளியூர் பேருந்துகள் தனியார் பேருந்துகள் அனைத்தும் இவ்வழியாக தான் சென்று வருகிறது. இந்த ரயில்வே கேட் கடக்கும் பாதையில் தண்டவாள பகுதியில் சிறிய பள்ளம் ஏற்பட்டிருப்பதால் அவ்வழியாக இரு சக்கர வாகனத்திலோ சரக்கு வாகனமோ கடந்து செல்லும் பொழுது சிறிய பள்ளத்தில் விழுந்து அதன் பிறகு தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. இந்நிலை ஒரு சில நேரங்களில் ரயிலுக்காக கேட்டு மூடப்பட்டு திறக்கும் பொழுது எதிரெதிரே வாகனங்கள் கடந்து செல்லும் பொழுது இந்த சிறிய பள்ளத்தில் வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் நிலை ஏற்படுகிறது