குலசேகரன்பட்டினம் ஊராட்சி கூட்டம்
உடன்குடி, ஜூன் 28: குலசேகரன்பட்டினம் ஊராட்சியில் சாதாரண கூட்டம், பஞ்சாயத்து தலைவர் சொர்ணபிரியா தலைமையில் நடந்தது. துணை தலைவர் வக்கீல் கணேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாதாந்திர வரவு-செலவு, கல்லாமொழியில் சிமென்ட் சாலை அமைத்தல் மற்றும் கடற்கரை பூங்காவில் விளக்குகள் பழுது நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் உறுப்பினர்கள் ராமலிங்கம் (எ) துரை, இசக்கி, ஞானஈஸ்வரி, முத்துசாமி, ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் ரசூல்தீன் செய்திருந்தார்.
Advertisement
Advertisement