பூக்கள் விற்க சென்ற விவசாயி மாயம்
கிருஷ்ணகிரி, அக். 30: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை முகலூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (65), விவசாயி. இவர் கடந்த 23ம் தேதி பெங்களூருவுக்கு பூக்களை விற்பனை செய்வதற்காக சென்றார். அதன் பின்னர், அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, பெருமாளின் மகன் அமரேசன் ராயக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான பெருமாளை தேடி வருகின்றனர்.
Advertisement
Advertisement