தார்சாலை விரிவாக்க பணிகளை அதிகாரி ஆய்வு
தேன்கனிக்கோட்டை, ஆக.30: கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை கோட்டம், தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்திற்கு உட்பட்ட ராயக்கோட்டை-அத்திப்பள்ளி சாலையில், முதல்வரின் சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ், இரண்டு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலை பணிகளை, நேற்று கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் திருலோகச்சந்தர் களஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, தேன்கனிக்கோட்டை உதவி கோட்ட பொறியாளர் கவிதா, உதவிபொறியாளர் நவீன்குமார், சாலை ஆய்வாளர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.
Advertisement
Advertisement