பெட்டிக்கடைகளில் குட்கா விற்பனை 3 வியாபாரிகள் அதிரடி கைது
கிருஷ்ணகிரி, அக்.28: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஏட்டு சீனிவாசன் மற்றும் போலீசார், பி.கொத்தூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள பெட்டிக்கடையில் சோதனையிட்டதில், தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கடை உரிமையாளர் கிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர். இதே போல், கந்திகுப்பம் எஸ்எஸ்ஐக்கள் ராஜேஸ்வரி, சேகர் ஆகியோர் சின்ன பனமுட்லு பகுதியில் ரோந்து சென்றனர். அதில் 2 கடைகளில் குட்கா விற்பனை செய்தது தொடர்பாக, கடை உரிமையாளர்கள் ராஜா (60), மாரியப்பன்(55) ஆகிய இருவரை கைது செய்தனர்.
Advertisement
Advertisement