காவேரிப்பட்டணம் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
காவேரிப்பட்டணம், ஆக.27: காவேரிப்பட்டணம் ஒன்றியம், குண்டலப்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமினை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் மகேஸ்வரி துவக்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சிறப்பு திட்ட செயலாக்க துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகளின் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக பங்கேற்று கோரிக்கை மனுக்களை வழங்கினர். மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாரிமுத்து, வருவாய் ஆய்வாளர் திவ்யா, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்மார்ட் கார்டு, மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் உறுப்பினர் அட்டைகளை வழங்கினர். ஊராட்சி செயலர்கள் ராமச்சந்திரன், செந்தில்குமார் ஆகியோர் நன்றி கூறினர்.