ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., திடீர் ஆய்வு
ஊத்தங்கரை, ஆக.27: ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., திடீர் ஆய்வு மேற்கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, சிங்காரபேட்டை ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில், மாவட்ட எஸ்பி தங்கதுரை திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிங்காரபேட்டை காவல் நிலையத்தில் போலீஸ் எஸ்ஐ நித்தியா, ஊத்தங்கரை காவல் நிலையத்தில் எஸ்ஐ மோகன் ஆகியோரிடம் காவல்நிலையத்தின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து வழக்குகள் தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது, டிஎஸ்பி சீனிவாசன், ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் முருகன், எஸ்ஐகள் மோகன், பாலகிருஷ்ணன், ரமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Advertisement
Advertisement