காரில் கடத்தி வந்த 125 கிலோ குட்கா பறிமுதல்
ஓசூர், செப்.26: ஓசூர் அடுத்த கொத்தகொண்டப்பள்ளி டிவிஎஸ் சோதனை சாவடி அருகில், மத்திகிரி போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் கேட்பாரற்று நின்றிருந்த காரை சோதனை செய்தனர். அதில் 125 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது. விசாரணையில், பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தி வரப்பட்டது தெரிந்தது. இதனையடுத்து, காருடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அவற்றை கடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் பகுதியை சேர்ந்த சுதாகர் (44) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Advertisement
Advertisement