33 வார்டுகளிலும் 27ம் தேதி சிறப்பு கூட்டம்
கிருஷ்ணகிரி, அக்.25: கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் வரும் 27ம் தேதி(திங்கட்கிழமை) சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 33 வார்டுகளிலும் வரும் 27ம் தேதி(திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் தலைமையில் வார்டு சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. பொதுமக்கள், தங்களது வார்டு பகுதியில் அடிப்படை சேவைகளான குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலை பழுதுகள், பூங்காக்கள் பராமரிப்பு மற்றும் மழைநீர் வடிகால் பராமரிப்பு போன்றவற்றில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், மேற்படி கூட்டத்தில் கலந்துகொண்டு எடுத்துரைக்கலாம். எனவே, சம்மந்தப்படட வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு, பயன்பெறுமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.