கிருஷ்ணகிரியில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்
கிருஷ்ணகிரி, செப்.23: கிருஷ்ணகிரியில் வருகிற 26ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாவட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இரண்டாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், வருகிற 26ம் தேதி (வெள்ளிக் கிழமை) காலை 10 மணிக்கு, விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகிக்கிறார். எனவே, கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு, தங்கள் குறைகளை தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement