டூவீலர் கவிழ்ந்து தனியார் ஊழியர் பலி
தேன்கனிக்கோட்டை, செப்.23: தளி அருகே தாசரிப்பள்ளியை சேர்ந்தவர் ஜான் ஜஸ்டின்(30). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம், அவர் தளி-தேன்கனிக்கோட்டை சாலையில், தளி கொத்தனூர் பக்கமாக சென்ற போது, டூவீலர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ஜான் ஜஸ்டின், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த விபத்து குறித்து, தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement