23வது வார்டில் மேயர் ஆய்வு
ஓசூர், ஆக.22: ஓசூர் மாநகராட்சி 23வது வார்டிற்கு உட்பட்ட மகாலட்சுமி நகர் பகுதிகளில், கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு, குடிநீர் பிரச்னை இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். இதை தொடர்ந்து, ஓசூர் மேயர் சத்யா, வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சாக்கடை பிரச்னை, குடிநீர் பிரச்னை குறித்து வீடுகள் தோறும் பார்வையிட்டார். பின்னர், அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில், உதவி பொறியாளர் பிரபாகர், மற்றும் திமுக நிர்வாகிகள் ஜெயக்குமார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement