கருங்கற்கள் கடத்திய மினிலாரி பறிமுதல்
கிருஷ்ணகிரி, நவ.21: கிருஷ்ணகிரி கனிம வளத்துறை உதவி இயக்குனர் பாரதி மற்றும் அலுவலர்கள், கிருஷ்ணகிரி -ராயக்கோட்டை சாலையில் மாதேப்பட்டி என்னுமிடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் கேட்பாரற்று நின்ற மினி லாரியில் சோதனை செய்தனர். அதில், கருங்கற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.3 ஆயிரம் மதிப்பிலான அந்த கற்களை கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டைக்கு கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த லாரியை கற்களுடன் பறிமுதல் செய்து தாலுகா காவல்நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியின் உரிமையாளர் மற்றும் டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement