ஓசூர் ராமநாயக்கன் ஏரி பூங்காவில் மேயர் ஆய்வு
ஓசூர், நவ.21: ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமநாயக்கன் ஏரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவினை மேயர் சத்யா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து, மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசித்தார். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைப்பது, பொது கழிப்பிடங்களை பராமரித்தல், விளையாட்டு உபகரணங்கள் கூடுதலாக அமைத்து தருதல் மற்றும் நிழற்கூடைகள் அமைப்பது குறித்து அறிவுறுத்தினார். ஆய்வின் போது, அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் இந்திராணி, நாகராஜ், மாரக்கா சென்னீரன், யஸ்வினி மோகன், மாவட்ட பிரதிநிதி ஜெய் ஆனந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Advertisement
Advertisement