அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
கிருஷ்ணகிரி, நவ.19: கிருஷ்ணகிரி நகராட்சி அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்எல்ஏ தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி எம்எல்ஏ கலந்து கொண்டு, வாக்குச்சாவடி முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார். அப்போது, அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை எடுத்துரைத்து பொதுமக்களிடம் வாக்குகளை சேகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில், வாக்குச்சாவடி பொறுப்பாளர் நிர்மல், மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நகர அதிமுக செயலாளர் கேசவன் செய்திருந்தார்.
Advertisement
Advertisement