17 வயது சிறுமி கடத்தல் வாலிபர் மீது புகார்
ஊத்தங்கரை, செப். 19: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை கெண்டிக்கானூர் பகுதியை சேர்ந்த 17வயது சிறுமி வீட்டில் இருந்து வந்தார். கடந்த 12ம் தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். அவளை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதில், அதே பகுதியில் உள்ள மல்லிப்பட்டியை சேர்ந்த தங்கராஜ்(25) என்பவர், தங்களது மகளை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும், அவரிடமிருந்து மகளை மீட்டு தர வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.
Advertisement
Advertisement