குட்கா பொருட்கள் விற்ற 5 பேர் கைது
கிருஷ்ணகிரி, நவ.18: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், புகையிலை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். கிருஷ்ணகிரி, ஓசூர் மத்திகிரி, கந்திகுப்பம், நாகரசம்பட்டி, போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதியில் சோதனை நடத்தியதில் புகையிலை பொருட்கள் விற்றதாக அன்வர் பாஷா, வெங்கடேசன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1700 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement