சூதாடிய 17 பேர் கைது: ரூ.1.40 லட்சம் பறிமுதல்
Advertisement
போச்சம்பள்ளி, அக்.18: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகேயுள்ள கிட்டனூர் பகுதியில் சூதாட்டம் நடப்பதாக மத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றபோது, அங்குள்ள மாந்தோப்பில் சூதாடி கொண்டிருந்த கும்பலை சுற்றிவளைத்தனர். அப்போது அவர்களில் சிலர் தப்பினர். போலீசாரின் பிடியில் சிக்கிய 17 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1.40 லட்சத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தப்பியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement