உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
தேன்கனிக்கோட்டை, அக்.17: தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் மகளிர் உரிமை தொகை, பட்டா மாற்றம், முதியோர் உதவி தொகை, ரேஷன் அட்டை, ஆதார் திருத்தம், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, காப்பீடு அட்டை, மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அரங்குகள் அமைத்து அதிகாரிகள் மனுக்கள் பெற்றனர். முகாமில் அந்தேவனப்பள்ளி, கராண்டப்பள்ளி, குந்துக்கோட்டை ஊராட்சி மக்கள் மனுக்கள் கொடுத்தனர். தளி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி முகாமை பார்வையிட்டார். அஞ்செட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, குந்துக்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ெஜயராமன், மூர்த்தி, மாதேஷ், ஊராட்சி உதவியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement