மண் கடத்திய லாரி பறிமுதல்
கிருஷ்ணகிரி, அக்.17: கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி சிறுவர் பூங்கா அருகே, தேவசமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் சீதா மற்றும் அலுவலர்கள் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற லாரியில் சோதனை மேற்கொண்டனர். அதில், ரூ.2500 மதிப்புள்ள 3 யூனிட் மண் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்து, கேஆர்பி டேம் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியின் உரிமையாளர் மற்றும் டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement