இலவச வேலைவாய்ப்பு முகாம்
காவேரிப்பட்டணம், செப்.15: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட வேலம்பட்டி கிராமத்தில், அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில், மணிகண்டன் தலைமையில் ஓசூரில் இயங்கி வரும் பிரபல செல்போன் தயாரிக்கும் நிறுவன பணியிடங்களுக்கான இலவச மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
முகாமினை அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி அசோக்குமார் எம்எல்ஏ, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், பையூர் ரவி, நாகோஜனஅள்ளி பேரூர் செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முகாமில் சுற்று வட்டார பகுதிகளான மத்தூர், போச்சம்பள்ளி, அகரம், வேலம்பட்டி, சந்தூர், நெடுங்கல், வேப்பனஹள்ளி, பர்கூர், மகாராஜாகடை, குந்தாரப்பள்ளி, எம்.சி.பள்ளி ஆகிய கிராமங்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு
பயனடைந்தனர்.