சாலையோரங்களில் கால்நடை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு
Advertisement
போச்சம்பள்ளி, செப்.15: போச்சம்பள்ளியில், ஞாயிறுதோறும் வாரச்சந்தை கூடுவது வழக்கம். சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தமிழகத்திலேலே 2வது சந்தையாக திகழும் இஙகு, கால்நடை வியாபாரிகள் சந்தையில் வியாபாரம் செய்யாமல், திருப்பத்தூர் மெயின் சாலையில் கால்நடைகளை விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் சென்னை, வேலூர், திருப்பதி, திருவண்ணாமலை, பாண்டிசேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் சென்று வருகிறது. ஆனால் சாலையோரங்களை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
எனவே, சாலையோரங்களில் ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement