காரில் குட்கா கடத்தியவர் கைது
Advertisement
கிருஷ்ணகிரி, அக். 13: கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணகிரி டோல்கேட் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.1.43 லட்சம் மதிப்பிலான 230 கிலோ குட்கா கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. காரை ஒட்டி வந்த டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், அந்த வாலிபர் ராஜஸ்தான் மாநிலம் பனமாலா கிராமத்தை சேர்ந்த தன்பந்த்சிங்(28) என்பது தெரிய வந்தது. குட்கா, கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement