மனைவியை கத்தியால் குத்திய கணவன் கைது
Advertisement
தேன்கனிக்கோட்டை, அக். 13: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பட்டேல் தெருவில் வசிப்பவர் சத்யராஜ் (34). டிரைவர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரியா (23), கூலி வேலை செய்து வருகிறார்.
மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதால், நேற்று முன்தினம் சத்யராஜ் மது போதையில் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறில், சத்யராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரியாவின் கழுத்து பகுதியில் குத்தி உள்ளார்.
அவரது சத்தம் கேட்டு அங்கு வந்தவர்கள், பிரியாவை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து பிரியா கொடுத்த புகாரின் பேரில், தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், சத்யராஜை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Advertisement